ஒரு எரிக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு - விசாரணை

24 ஆவணி 2025 ஞாயிறு 00:21 | பார்வைகள் : 562
கடந்த ஓகஸ்ட் 13, எரிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சனிக்கிழமை, Clermont-Ferrand நீதிமன்றம், 'ஒழுங்கமைக்கப்பட்ட குழு கொலை" மற்றும் "குற்றவாளிகள் கூட்டு" ஆகியவற்றிற்காக ஒரு இளைஞர் விசாரணையில் உள்ளதாகத் தெரிவித்தது.
ஓகஸ்ட் 13, Clermont-Ferrand (Puy-de-Dôme) இல் ஒரு மனிதனின் எரிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சனிக்கிழமை, ஒரு சந்தேக நபர் விசாரணையில் வைக்கப்பட்டார்.
20 முதல் 25 வயது வரையிலான இளைஞர், நீதிமன்றத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சிறப்பு குற்றப் பிரிவான DCOS (Division de la criminalité organisée et spécialisée) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு. ள்ளார். ஏற்கனவே இவர் போதைப்பொருள் குற்றங்களிற்காகத் தண்டிக்கப்பட்டவர். விசாரணையின் பிறகு, அவர் தற்காலிக காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த 13 ஓகஸ்ட், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பின்னணி கொண்ட மற்றும் Avignon பிராந்தியத்தைச் சேர்ந்த 28 வயது மனிதனின் உடல், நகரின் வடக்கில் உள்ள ஒரு பகுதியான Croix-de-Neyrat இல் எரிக்கப்பட்ட ஒரு எரிக்கப்பட்ட ஒரு சிற்றுநதில் எரிந்த நிலையில் கண்டெடுக்ப்பட்டது.
அதே இரவு, அதே பகுதியில், Vaucluse இலிருந்து வந்த 22 வயது மனிதர், காலில் குண்டு தாக்குதலுக்கு உள்ளானார், அவர் "ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் கொலை முயற்சி" என்பதற்காக விசாரணையில் வைக்கப்பட்டார்.
கொலையில் சந்தேகிக்கப்படும் நபர் இந்த சம்பவங்களுக்காகவும் விசாரணையில் வைக்கப்பட்டார்.
இதுவரை பாதுகாக்கப்பட்ட Auvergne தலைநகரம், இந்த குளிர்காலத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டதுடன் கணக்குத் தீர்த்தல் கொலைகளின் களமாகவும் மாறி உள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2