Paristamil Navigation Paristamil advert login

பணம் செலுத்தும் விளையாட்டை நிறுத்திய Dream11 - பிசிசிஐ ஸ்பான்சர்களுக்கு தொடரும் சாபம்

பணம் செலுத்தும் விளையாட்டை நிறுத்திய Dream11 - பிசிசிஐ ஸ்பான்சர்களுக்கு தொடரும் சாபம்

23 ஆவணி 2025 சனி 13:49 | பார்வைகள் : 114


இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக சிக்கலை சந்தித்து வருகிறது. இந்திய ஆடைகள்

 

கடந்த வியாழக்கிழமை, Promotion & Regulation of Online Gaming Bill 2025 என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மசோதா, பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்கிறது. இந்த விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்தியாவின் மிகப்பெரிய பேண்டஸி விளையாட்டு நிறுவனமான Dream 11 நிறுவனமும் இந்த தடையின் கீழ் வருகிறது. இதனைத்தொடர்ந்து பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டை நிறுத்துவதாக Dream 11 அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், இந்த மசோதா இந்திய கிரிக்கெட் அணியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Dream 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக பிசிசிஐ உடன் ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு வரை உள்ளது. இந்திய ஆடைகள்

 

இந்நிலையில், இந்த மசோதா இந்திய கிரிக்கெட் அணியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Dream 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக பிசிசிஐ உடன் ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு வரை உள்ளது. இந்திய ஆடைகள்

 

செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்க உள்ள ஆசிய கோப்பையில், இந்திய அணி விளையாட உள்ளதால், ஜெர்ஸியில் ஸ்பான்ஸர் இல்லாமல் விளையாடுமா அல்லது வேறு புதிய ஸ்பான்சருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.இந்திய ஆடைகள்

 

இது குறித்து பிசிசிஐ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்திய அணியின் ஸ்பான்சராக இருக்கும் நிறுவனம் பாதிக்கப்படுவது இது முதல் முறை இல்லை.

 

சஹாரா

ரியல் எஸ்டேட், விமான சேவை, ஊடகம் என பல துறைகளில் செயல்பட்டு வந்த சஹாரா நிறுவனம் 2001 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக செயல்பட்டது.

 

2011 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கருதப்படும் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ..24,000 கோடி பணத்தை திரும்ப செலுத்த SEBI உத்தரவிட்டது.

 

இதனால் பெரும் நிதி நெருக்கடியில் சஹாரா சிக்கியதோடு, 2014 ஆம் ஆண்டில் அதன் நிறுவனர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார்.

 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

2014 முதல் 2017 வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக செயல்பட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ், கிரிக்கெட் ஒளிபரப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய ஆடைகள்

 

இதனையடுத்து, விளையாட்டு ஒளிபரப்பு ஆதிக்கத்தின் மூலம் துஷ்பிரயோகம் செய்ததாக, இந்திய போட்டி ஆணையத்தின் கண்காணிப்பை எதிர்கொண்டது. தற்போது ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்துள்ளது.

 

ஒப்போ

2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக 5 ஆண்டுகளுக்கு ரூ.1,079 கோடி செலுத்தி பிசிசிஐ உடன் பிரபல சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ ஒப்பந்தம் செய்தது.

 

சீன மற்றும் இந்தியா இடையே ஏற்பட்ட அரசியல் பதற்றம் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது.

 

பைஜூஸ்

2019 முதல் 2022 வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக விளங்கிய இந்தியாவின் பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனமான Byjus, பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி திவால் நிலையை எட்டியது.

 

Dream 11 நிறுவனத்திற்கு பதிலாக புதிய ஸ்பான்சருக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்தால், டாடா, ஜியோ போன்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்