மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பதால் எல்லோருக்கும் இலவச நீச்சல் பயிற்சி தேவை என கோரிக்கை!!

22 ஆவணி 2025 வெள்ளி 22:12 | பார்வைகள் : 592
பிரான்ஸில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 1,013 பேர்கள் மூழ்கியுள்ளதாக Santé publique France தெரிவித்துள்ளது, இதில் நாலில் ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த கோடைகாலத்தில் மூழ்கும் சம்பவங்கள் 14% அதிகரித்துள்ளன.
இந்த நிலையை மையமாக கொண்டு, பிரெஞ்சு நீச்சல் பயிற்றுநர் கூட்டமைப்பு (Fédération française des maîtres-nageurs) "எல்லோருக்கும் இலவச நீச்சல் கற்றல் திட்டம்" ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்த கூட்டமைப்பின் உறுப்பினர் Axel Lamotte கூறுகையில், மக்கள் இன்று சரியாக நீந்தத் தெரியாமல், உடல்நிலைமையும் குன்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். நீராடும் மகிழ்ச்சி கூட ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால், நீச்சல் பயிற்சி ஒரு பொதுசுகாதார தேவையாகும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் பாடசாலைகளில் நிபுணர்கள் இல்லாமல், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் நீச்சல் கற்றல் நடந்துவருவது தவறானதாகவும், எல்லோருக்கும் தரமான பயிற்சி கிடைக்க இலவச திட்டம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1