Chelles: காதல் பொய்க்கு பழிவாங்க இளைஞர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்!!

22 ஆவணி 2025 வெள்ளி 20:50 | பார்வைகள் : 2522
Chellesஇல் வாழும் இருபதுகளுக்கு உட்பட்ட ஒரு இளைஞர், தனது முன்னாள் காதலியைப் பற்றி பொய் கூறியதாகக் கூறி, கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண், பழிவாங்கும் நோக்கில், தன்னை சந்திக்க அழைத்து, தனது இரு தோழிகளுடன் காரில் கூட்டிச் சென்றுள்ளார். பின்னர், Chellesஇல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நால்வர் இருந்துள்ளார்கரள். அவர்கள் அந்த இளைஞரை கட்டிப்போட்டு, அவரது மொபைல் போனை பறித்து, அடித்துத் தாக்கியுள்ளனர்.
இந்த வன்முறை இரவு முழுவதும் நீடித்தது. இறுதியில், அவரை குளிக்க அனுமதித்து, புதிய ஆடைகள் தரப்பட்டு, ஒரு பஸ் டெப்போவுக்குள் விட்டுவிடப்பட்டுள்ளார்.
காவல் துறையினர் தொலைபேசி விவரங்களை வைத்து விசாரித்து, ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு, Meaux நீதிமன்றத்தில் எதிர்காலத்தில் ஆஜராகும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1