La Poste அமெரிக்காவிற்கு பார்சல் அனுப்பவதை நிறுத்துகிறது!!!

22 ஆவணி 2025 வெள்ளி 16:47 | பார்வைகள் : 469
அமெரிக்கா சுங்க விதிகளை கடுமையாக மாற்றியதால், பிரான்ஸ் அஞ்சல் சேவை La Poste, ஆகஸ்ட் 25 முதல் பெரும்பாலான பார்சல் அனுப்புதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இது டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட உத்தரவின் விளைவாக ஆகும், இதில் $800 (சுமார் 690 யூரோ) வரை மதிப்புள்ள சிறிய பார்சல்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கு ஆகஸ்ட் 29 முதல் நீக்கப்படுகிறது. பரிசுகள் எனும் வகையில் தனிநபர்கள் அனுப்பும் 100 யூரோவிற்கு குறைவான பொருட்கள் மட்டும் அனுப்ப அனுமதிக்கப்படுகின்றன.
ஜெர்மனியின் DHL உட்பட பல ஐரோப்பிய அஞ்சல் நிறுவனங்கள் இந்நிலையில் அதேபோன்று தற்காலிக நிறுத்தங்களை அறிவித்துள்ளன. புதிய அமெரிக்க சுங்க விதிகள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லாததால், யார் சுங்க கட்டணங்களை வசூலிப்பார்கள் என்பதுபோன்ற கேள்விகள் இன்னும் பதிலின்றி உள்ளன.
இது ஐரோப்பிய நாடுகளின் அஞ்சல் நிறுவனங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி, பலர் அனுப்புதலை நிறுத்தும் முடிவை எடுத்து வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1