கள்ள கடவுச் சீட்டில் வந்திறங்கிய அகதி! - விமானநிலையத்தில் கைது!!

22 ஆவணி 2025 வெள்ளி 14:24 | பார்வைகள் : 740
போலியான கடவுச்சீட்டுடன் விமான நிலையத்தில் வந்திறங்கிய அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் 13, புதன்கிழமை மார்செயின் Marignane விமான நிலையத்தில் ஈரானிய நபர் ஒருவர் வந்திறங்கினார். அவர் கைகளில் வைத்திருந்தது அவுஸ்திரேலிய கடவுச் சீட்டாகும். அவரது ஆங்கில உச்சரிப்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவர் விசாரிக்கப்பட்டார். அதை அடுத்து அவர் அல்ஜீரிய குடியுரிமை கொண்டவர் எனவும், கைகளில் வைத்திருந்த அவுஸ்திரேலிய கடவுச் சீட்டு திருடப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது.
அவர் பிரான்சில் புகலிடக்கோரிக்கைக்கான கோரிக்கை வைத்ததாகவும், ஆனா அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை மீண்டும் அல்ஜீரியாவுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து, அடம்பிடித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1