காவற்துறை மீது தாக்குதல் - நாட்டை விட்டு வெளியேற்றப்படும் ஆணை!

22 ஆவணி 2025 வெள்ளி 13:58 | பார்வைகள் : 554
பரிஸின் 17வது மாவட்டத்தில் நடத்திய சோதனை ஒன்றின்போது மூன்று காவல்துறையினர் ஓகஸ்ட் 20 புதன்கிழமை மாலை காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னர் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனும் கட்டளை (OQTF) பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
காவல்துறையினருக்கு இன்னும் ஒரு ஆபத்தான இரவாக இது அமைந்தது. வாகனங்களில் திருட்டு மற்றும் சேதம் செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை பின்தொடர்ந்து சென்ற நான்கு குற்றத்தடுப்புப் பிரிவினரான BAC காவல்துறையினர், பாரிஸின் 17வது மாவட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாகி உள்ளனர்.
இரவு 11:30 மணியளவில், Boulevard Pereire அருகே, சந்தேக நபர்களை கைது செய்ய முயன்ற காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தகவல்களின்படி, தாக்கியவர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் ஒரு காவலரின் காதில் காயம் ஏற்படுத்தினார், மற்றொருவரின் தாடையில் அடித்தார், மூன்றாவது காவலரின் முதுகில் பல தடவை தாக்கி உள்ளார்.
தாக்கிய நபர்கள் தப்பியோடியுள்ளனர், பின்னர் அருகிலுள்ள பகுதியில் வந்து சேர்ந்த மேலதிகக் காவல்துறை வீரர்களால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். முதல் சந்தேக நபர் Clichy இல் BAC காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரண்டாவது சந்தேக நபர் பாரிஸின் 17வது மாவட்டத்தில் உள்ள rue Guersant இல் கைது செய்யப்பட்டார்.
தகவல்களின்படி, தாக்குதல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி 1991 ஜூனில் காசாபிளாங்கா, மொராக்கோவில் பிறந்த இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனும் கட்டளை (OQTF) பெற்றிருந்தார். இவரிற்கு உடந்தையாக இருந்த குற்றவாளி 2007 ஓகஸ்டில் அல்ஜீரியாவில் பிறந்தவர்.
பரிஸ் நீதிமன்றம், மக்கள் பாதுகாப்ப அதிகாரத்தைக் கொண்ட நபர்களைக் (காவற்துறையினர்) கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டி முதல் மாவட்ட காவல் துறைக்கு விசாரணை ஒப்படைத்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1