யூத எதிர்ப்பு - இலான் ஹாலிமிக்கு அஞ்சலிக்குறியாக ஒரு மரம் நடும் படி துநகர முதல்வர்களுக்கும் கோரிக்கை!

21 ஆவணி 2025 வியாழன் 15:17 | பார்வைகள் : 399
வழக்கறிஞர் அலன் ஜக்குபோவிச் (Alain Jakubowicz) பிரான்ஸின் நகர முதல்வர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்: Ilan Halimiக்கு அஞ்சலியாக ஒவ்வொரு நகரமும் ஒரு மரம் நட வேண்டும் என இவர் விரும்புகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 'gang des barbares' என்ற கும்பலால் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டவர் Ilan Halimi.
யூத எதிர்ப்புக்கு பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை அறிவுறுத்த, பிரான்ஸின் நகர முதல்வர்கள் Ilan Halimiக்கு அஞ்சலியாக ஒரு மரம் நடவேண்டும் என்று இவர் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
"சமூக ஊடகங்களில் ஏற்கனவே சிலர் இதற்கு ஆதரவாக, வெளிப்படையாகக் குரல் எழுப்பியுள்ளனர், இப்போதுவரை மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளது.
"நகர முதல்வர்களிடமும், குறிப்பாக பிரெஞ்சு மக்களிடமும், தங்கள் நகர முதல்வரின் பக்கத்தில் நின்று, இந்தக் கோரிக்கையை அவரிடம் முன்வைக்கும்படி" வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். யூத எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் பிரெஞ்சு மக்கள் கைகொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்த புதன்கிழமை, Alain Jakubowicz ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதில் அவர் பிரான்ஸின் நகர முதல்வர்களிடம் உரையாற்றி, Épinay-sur-Seine எனும் இடத்தில் Ilan Halimiக்கு அஞ்சலியாக நடப்பட்ட ஒரு ஒலிவ் மரம் வெட்டுண்ட சம்பவத்தை நினைவுபடுத்தினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1