நான் ஏமாற்றமடைந்தேன் - அவுஸ்திரேலியாவை சுழலில் வீழ்த்திய மஹாராஜ் கூறிய விடயம்

21 ஆவணி 2025 வியாழன் 04:09 | பார்வைகள் : 413
தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹாராஜ் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். முதல் முறையாக அவர் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த நிலையில் டி20 போட்டிகளை அவர் புறக்கணிப்பதாக நிலவும் ஊகங்களுக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன்.
அதனால் நான் கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன் (டி20 போட்டிகளில் இருந்து விலகியதால்). ஆனால் பயிற்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உணர்ந்ததாக நான் நினைக்கிறேன்.
குறுகிய வடிவங்களில் என்னால் அதை செய்ய முடியும் என்பதைக் காட்ட ஒரு செயல்திறனை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
கேஷவ் மஹாராஜ் (Keshav Maharaj) டெஸ்டில் 203 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 63 விக்கெட்டுகளும், டி20யில் 38 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1