Paristamil Navigation Paristamil advert login

70% பேர் திருமணம் செய்யாம லிவ்-இன் உறவில் வாழும் நாடு இதுதான்... இந்தியால எவ்வளவு பேர் வாழ்கிறார்கள் தெரியுமா?

70% பேர் திருமணம் செய்யாம லிவ்-இன் உறவில் வாழும் நாடு இதுதான்... இந்தியால எவ்வளவு பேர் வாழ்கிறார்கள் தெரியுமா?

20 ஆவணி 2025 புதன் 18:32 | பார்வைகள் : 143


ஆண்-பெண் இடையேயான உறவுகள் உலகம் தோன்றிய காலம் முதலே பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆண்-பெண் உறவை உறுதியாக வைத்திருக்க அவர்களை திருமணம் என்ற பந்தத்தில் இணைப்பது கிட்டதட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ளது. திருமணம் பல்லாயிரம் வருடங்களாக மனித நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

கடந்த நூற்றாண்டில் இந்த திருமணம் இல்லாத மற்றொரு ஆண்-பெண் உறவு மக்களிடையே வேகமாக பரவத் தொடங்கியது. அதுதான் லிவ்-இன்(Live-In) உறவுமுறை. லிவ்-இன் உறவுகள் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டவையாக கருதப்பட்டன. ஆனால் மெல்ல மெல்ல இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

 

லிவ்-இன் உறவு என்றால் என்ன?

 

ஒரு ஜோடியாக வாழ்வதற்கு நவீன வழியாக, திருமணம் என்ற உறவில் தேவை இல்லாமல் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையையும், வீட்டையும் பகிர்ந்து கொள்வதுதான் லிவ்-இன் உறவுமுறை. திருமணத்தை உயர்வாகக் கருதும் உலகின் சில பகுதிகளிலும், சில கலாச்சாரங்களிலும் இன்னும் லிவ்-இன் உறவுமுறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதேசமயம் லிவ்-இன் உறவுகள் அன்பு மற்றும் நம்பிக்கையின்வெளிப்பாடாக இருக்கின்றன என்று இளைஞர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த உறவுமுறை முழுக்க முழுக்க நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

 

எந்த நாட்டில் லிவ்-இன் தம்பதிகள் அதிகம் வாழ்கிறார்கள்?

 

மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவும் லிவ்-இன் உறவுகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறது. லிவ்-இன் உறவு என்பது இரண்டு காதலர்கள் திருமணமான தம்பதிகளைப் போல ஆனால் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வது. ஆனால் உலகில் எந்த நாட்டில் லிவ்-இன் உறவில் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

மற்ற அனைத்து நாடுகளையும் விடவும் ஸ்வீடனில் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் தம்பதிகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. ஸ்வீடனில் சுமார் 70 சதவீத மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் தோராயமாக 40 சதவீத தம்பதிகள் சிறிது காலத்திற்குப் பிறகு உறவை முறித்துக் கொள்கிறார்கள், அதே நேரத்தில் 10 சதவீத தம்பதிகள் மட்டுமே தங்கள் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஜோடியாக இருக்க விரும்புகிறார்கள்.

 

அடுத்தடுத்த இடங்களில் உள்ள நாடுகள் எது?

 

ஸ்வீடனுக்கு அடுத்த இடத்தில் நார்வே உள்ளது. இந்த நாட்டிலும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் லிவ்-இன் உறவுகளில் இருக்க விரும்புகிறார்கள். நார்வேக்கு அடுத்தபடியாக டென்மார்க் உள்ளது, அங்கு கணிசமான எண்ணிக்கையிலான தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ விரும்புகிறார்கள்.

 

இந்தியாவின் நிலை என்ன?

 

இந்தியாவில் லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் சரியான சதவீதத்தை தீர்மானிப்பது எளிதல்ல, ஏனெனில் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், இது மக்களால் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் லிவ்-இன் உறவுகளில் உள்ள தம்பதிகளின் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

 

ஊடக அறிக்கைகளின்படி, வளர்ந்த நகரங்களில் 10 ஜோடிகளில் 1 ஜோடி லிவ்-இன் உறவில் உள்ளார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், Uniform Civil Code(UCC) செயல்படுத்தப்பட்ட பிறகு, லிவ்-இன் உறவில் உள்ள ஒரு ஜோடி முதல் முறையாக சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. லிவ்-இன் உறவில் இருக்கும் சூழலில், வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க உதவும் வகையில், இந்த உறவுகளைப் பதிவு செய்வதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு கட்டமைப்பை UCC வழங்க முயல்கிறது.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்