காவற்துறையினர் எங்கும் கொல்கின்றார்கள் - பாராளுமன்ற உறுப்பினர் கருத்தால் சர்ச்சை!!

20 ஆவணி 2025 புதன் 11:42 | பார்வைகள் : 784
செவ்வாய் 19 ஓகஸ்ட், ஜோன்-லுக் மெரோன்சோனின்LFI (La France insoumise) கட்சியைச் சார்ந்த Cergy-Pontoise நாடாளுமன்ற உறுப்பினர் ஒரேலியோன் தசே (Aurélien Taché), சமூக வலைதளமான X-இல் «காவற்துறையினர் எங்கும் கொல்கிறார்கள்» (La police tue partout) என்று பதிவிட்டார். இந்த கருத்து «பழிச்சொல்லும், அவதூறும்» எனக் கருதி, வல்துவாஸ் (Val-d’Oise) மாவட்டஆணையர் பிலிப் கூர் (Philippe Court) அவர்மீது புகார் கொடுத்துள்ளார்.
அவர் தனது X பதிவில், அந்தச் செய்தியை Aurélien Taché நீக்க வேண்டும் என்றும், காவற்துறையினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதோடு, «காவற்துறையினர் மற்றும் ஜோந்தாமெரி உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும் போது அவர்களுக்கு முழு ஆதரவு» எனவும் உறுதிபடுத்தினார்.
Aurélien Taché இந்தச் செய்தியை, Gabriel Bée என்ற இளைஞரின் நினைவாக நடத்தப்பட்ட அமைதிப் பேரணி (marche blanche) குறித்து பதிவிட்டார். அவர் மே 20-21 இரவில் ஜோந்தாமெரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். தற்போதைய நீதிமன்ற விசாரணையில், சுட்ட அதிகாரி நியாயமான தற்காப்பு காரணத்தால் சட்டபூர்வமாகக் கருதப்படுகிறார்.
Aurélien Taché மீது வழக்கு தொடுக்கப்பட்டாலும், அவர் தனது பதிவை நீக்கவில்லை.
Seine-Saint-Denis LFI பாராளுமன்ற உறுப்பினர் Thomas Portes, அவருக்கு ஆதரவாக «எந்த மிரட்டலும் எங்களை பின்வாங்கச் செய்யாது. பிரான்சில் காவற்துறை கொல்கிறது என்பதே உண்மை» என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பரிஸ்காவல் ஆணையர் Laurent Nuñez, «இல்லை, காவற்துறை கொல்வதில்லை» என்று தெளிவுபடுத்தினார். மேலும், «காவல்துறையினரும் ஜோந்தார்மினரும் நம் குடிமக்களின் சேவைக்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக, குடியரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காகவே செயல் படுகின்றனர்» எனக் கூறினார்.
இந்த வழக்கு வார்த்தை சுதந்திரம் மற்றும் காவற்துறை விமர்சனம் குறித்து பிரான்சு அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1