பெப்பர் சிக்கன்..

20 ஆவணி 2025 புதன் 07:20 | பார்வைகள் : 112
சுவையாலும் நாக்கை வசப்படுத்தும் பெப்பர் சிக்கன் இப்போது வீட்டு சமையலறையில் எளிதாகச் செய்யலாம் . இந்த பெப்பர் சிக்கன் ரெசிபி, கருப்பு மிளகின் சுவையுடன் சிக்கனின் மென்மையைக் கலந்த தனித்துவமான உணவாகும்.
தேவையான பொருட்கள்:சிக்கன் – 500 கிராம், வெங்காயம் – 2 (நறுக்கியது), தக்காளி – 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் கீறியது), இஞ்சி பூண்டு விழுது – 1 மேடை ஸ்பூன், கருப்பு மிளகு – 2 டீஸ்பூன் (அரைத்தது), மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், மிளகாய் தூள் – ½ டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 3 மேடை ஸ்பூன், கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:கடாயில் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி பச்சை வாடை சென்றதும் தக்காளி சேர்த்து குழைய விடவும்
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த கருப்பு மிளகு, உப்பு சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த கருப்பு மிளகு, உப்பு சேர்த்து கலக்கவும். மசாலாவை சேர்த்தவுடன் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேகவிடவும்.
மசாலாவை சேர்த்தவுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேகவிடவும்
இறுதியாக மேலும் சிறிதளவு கருப்பு மிளகு தூவி, எண்ணெய் மேலே மிதக்கும் வரை வதக்கினால் சுவையான பெப்பர் சிக்கன் தயார்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025