Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : போதையில் சாரதி.. - ஒருவர் பலி!!

Aulnay-sous-Bois : போதையில்  சாரதி.. - ஒருவர் பலி!!

19 ஆவணி 2025 செவ்வாய் 19:08 | பார்வைகள் : 3593


 

இலகுரக SUV வாகனம் ஒன்றில் குடிபோதையில் பயணித்த சாரதி ஒருவர் மகிழுந்து ஒன்றுடன் மோதித்தள்ளியுள்ளார்.

Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் ஓகஸ்ட்  17, ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய சாரதி ஒருவர் தனியே மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த SUV வாகனம் ஒன்று அவரது மகிழுந்தை மோதித்தள்ளியது.

இச்சம்பவத்தில் குறித்த சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.  

SUV வாகனத்தைச் செலுத்திய சாரதி நிறைந்த மதுபோதையில் இருந்ததாகவும், அவரது வாகனத்துக்கு இலக்கத்தகடோ, காப்புறுதியோ இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்