வீட்டு வாசலில் ஒரு அரக்கன்! - புட்டின் குறித்து மக்ரோன் காரசாரம்!!

19 ஆவணி 2025 செவ்வாய் 09:02 | பார்வைகள் : 1035
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் குறித்து ஜனாதிபதி மக்ரோன் 'அரக்கன்' எனும் அர்த்தமாகும் விதத்தில் விளித்துள்ளார். அவரது வார்த்தை பிரயோகம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு முத்தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தியிருந்தமை அறிந்ததே. புட்டின் அவரது வாக்குறுதிகளை அரிதாகவே நிறைவேற்றுகிறார். சர்வதிகார போக்கு அவருக்கு எளிதாக இருக்கிறது. நாளை அது ஐரோப்பாவை தாக்கக்கூடும் என மக்ரோன் தெரிவித்தார்.
அவர் தனது சக்தியை அதிகரிக்க, எல்லைகளஒ விஸ்தரிக்கும் சிந்தனையில் உள்ளார்.
"சர்வதிகாரிகம் ஒரு கொடூர வேட்டையாடும் விலங்கு. அது தொடர்ந்து சாப்பிட வேண்டும். அது நம் வீட்டு வாசலில் நிற்கும் ஒரு அரக்கன். நாளை பிரான்ஸ் தாக்கப்படும் என்று நான் கூறவில்லை, ஆனால் அது ஐரோப்பியர்களுக்கு அச்சுறுத்தலாகும்." என பொரிந்து தள்ளியுள்ளார்.