Paristamil Navigation Paristamil advert login

இரண்டு பேர் கத்திக்குத்துத் தாக்குதலில் காயம், ஒருவரின் நிலை மிகக் கவலைக்கிடம்

இரண்டு பேர் கத்திக்குத்துத் தாக்குதலில் காயம், ஒருவரின் நிலை மிகக் கவலைக்கிடம்

19 ஆவணி 2025 செவ்வாய் 05:00 | பார்வைகள் : 350


Clermont-Ferrand நகரில், ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு முகமூடி அணிந்த நபர்களால் நடாத்ப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில், ஒரு இளைஞன் தற்போது உயிர் ஆபத்தின் விளிம்பில் உள்ளார். மேலும் ஒரு சிறுவனும் காயமடைந்துள்ளார்.

காவற்துறை தகவலின்படி, இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 23 மணியளவில் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள Croix-de-Neyrat பகுதியில் நடைபெற்றது. அங்கு அண்மையில் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

«2005 மற்றும் 2009 இல் பிறந்த இரண்டு ஆண்கள் ஒரு குடியிருப்பில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகினர். அதில், முதியவர் வலது பக்கவாட்டிலும் இடது கையிலும் கடுமையாக காயமடைந்துள்ளார். அவரது உயிர் நிலை மிகுந்த ஆபத்தில் உள்ளது», என காவற்துறை தகவல்கள் தெரிவித்தன.

மற்றொரு சிறுவர் இடது கையிலும் நெற்றியிலும் லேசான காயங்களை மட்டுமே பெற்றுள்ளார். இதுவரை எவரும் காவலில் எடுக்கப்படவில்லை.

அதே ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட்கிழமை இரவில், 00h25 மணியளவில் காவற்துறையினர் நகரின் மற்றொரு பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதையடுத்து அழைக்கப்பட்டனர்.

அங்கு சென்று பார்த்தபோது, 7,65 மற்றும் 32 கலிபர் கொண்ட மூன்று தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு சாட்சிகள், முகமூடி அணிந்த இரு தாக்குதலாளர்கள் ஒரு வாகனத்தில் வந்ததாக தெரிவித்தனர். யாரும்காயமடையவில்லை.

ஏற்கனவே கடந்த வாரம், செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை இரவுக்குள், Croix-de-Neyrat பகுதியில் எரிந்த காரில் ஒரு சாம்பலான உடல் கண்டெடுக்கப்பட்டது. அதேசமயம், ஒருவருக்கு துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டது, மேலும் ஒரு வீடு தீவைத்துத் தாக்கப்பட்டது.

இந்த மாதிரி Clermont-Ferrand போன்ற பகுதிகளில் நடைபெறும் வன்முறைச் செய்திகள் அனைத்தும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பழிவாங்கும் சம்பவங்களாக 2024 முதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என காவற்துறை ஆதாரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்