வோஷிங்டன்னில் சந்திப்பு! - விடுமுறையை முடிந்துக்கொண்டு வெளியேறிய மக்ரோன்!!

18 ஆவணி 2025 திங்கள் 10:50 | பார்வைகள் : 415
இன்று ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை பிரான்ஸ் நேரம் மாலை 7.15 மணி அளவில் வோஷிங்டனில் இடம்பெற உள்ள சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மக்ரோன் புறப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக Fort Brégançon இல் ஓய்வில் இருந்த ஜனாதிபதி மக்ரோன், இன்று காலை அங்கிருந்து வெளியேறி Toulon-Hyères நகர் நோக்கி பயணித்தார். பின்னர் அங்கிருந்து ஜனாதிபதியின் விமானத்தில் வாஷிங்டன் நோக்கி புறப்பட்டார். பிரான்ஸ் நேரம் மாலை 6 மணிக்கு விமானம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 7.30 மணிக்கு இடம்பெற உள்ள இந்த சந்திப்பில், மக்ரோன், செலன்ஸ்கி, ட்ரம்ப் உள்ளிட்டோரும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.