Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா நோக்கி விரையும் மக்ரோன்!!

அமெரிக்கா நோக்கி விரையும் மக்ரோன்!!

18 ஆவணி 2025 திங்கள் 10:24 | பார்வைகள் : 381


டொனால்ட் ட்ரம்ப் - விளாதிமிர் புட்டின பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போனது. பேச்சவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, உக்ரைன் ரஸ்யாவின் பெற்றோல் ஆலைகள் மீது குண்டு விசியiதையடுத்து, அமைதி முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து எமானுவல் மக்ரோன் மற்றும் ஏனைய ஐரோப்பியத் தலைவர்களுடன் ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகள் நடந்த வோசிங்டன் செல்கின்றனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் இன்று காலை Washington DC நோக்கி புறப்பட்டார். அவர் பல வாரங்களாக தனது விடுமுறைகளை கழித்த Var மாகாணத்திலிருந்து புறப்பட்டார். நேற்று பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அவர், Vladimir Poutine “சமாதானத்தை விரும்பவில்லை” ஆனால் “உக்ரைனின் சரணாகதியை மட்டுமே விரும்புகிறார்” என்று வலியுறுத்தினார்.

எமானுவல் மக்ரோனின் விமானம் Toulon-Hyères விமான நிலையத்திலிருந்து Washington நோக்கி புறப்பட்டுவிட்டது. அது பிரான்ஸ் நேரப்படி மாலை 6 மணிக்கு (உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணி) அமெரிக்க தலைநகரத்தில் தரையிறங்கும். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் Maison Blanche-இல் மற்ற ஐரோப்பிய தலைவர்களுடன் சேர்ந்து வரவேற்கப்படவுள்ளார் என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்