ஒரு பல்லால் பார்வையை திரும்ப பெற்ற அதிசய வாழ்க்கை!!
17 புரட்டாசி 2025 புதன் 19:42 | பார்வைகள் : 2870
12 வயதிலிருந்து பார்வையிழந்த டிலன் வாஸ் (Dylan Vas), தற்போது 24வது வயதில், ஒரு அபூர்வமான அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் பார்வையை பெற்றுள்ளார்.
பிரான்ஸில் இது போன்ற சிகிச்சை முதல் முறையாக நடந்துள்ளது. டிலனின் பல் ஒன்றை எடுத்துத் துளைத்து, அதில் ஒரு சிறிய லென்ஸை பதித்துள்ளனர். பின்னர், இந்தத் துண்டை அவரது கண் பகுதியிலே பதிக்கிறார்கள், உடல் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில். இந்த அறுவை சிகிச்சை Montpellier நகரில் நடந்துள்ளது, வின்சென்ட் டயென் தலைமையிலான மருத்துவர் குழு இந்த அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, டிலன் தனது முகத்தைப் பார்த்ததும், தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களை மீண்டும் காண முடிந்ததும் உணர்ச்சி பூர்வமாகக் கண்ணீர் விட்டார். ஒருவாரத்துக்குள் அவர் 30% பார்வையை மீட்டுள்ளார். தற்போது, அவர் சுய வாழ்க்கையை ஆரம்பிக்கத் திட்டமிட்டு, தனியாக வீடு எடுக்கப் போகிறார். இந்த அறுவை சிகிச்சை அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan