செப்டம்பர் 22 - ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைகிறதா??

17 புரட்டாசி 2025 புதன் 14:50 | பார்வைகள் : 505
காஸாவில் கொல்லப்படும் மக்களுக்காக ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படவேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செப்டம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாகும்.
பிரான்சின் பசுமைக் கட்சி மற்றும் கம்யூனிச கட்சியினர் முன்வைத்த கோரிக்கையை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்வைத்தனர். வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உத்தியோகபூர்வ நாளாகும். 80 ஆவது ஐ.நா உச்சிமாநாட்டில் வைத்து ஜனாதிபதி மக்ரோன் அதனை அறிவிக்க உள்ளார். அன்றைய தினமே இதுவரை கொல்லப்பட்ட காஸா மக்களுக்காக ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட வேண்டும் என்பது கட்சிகளது கோரிக்கையாகும்.
ஆனால், பரிஸ் நகரசபை இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. அமைதி காக்கிறது.
முன்னதாக காஸா மக்களுக்காக ஏப்ரல் 21 ஆம் திகதி இருளில் மூழ்கியிருந்தது. அதன் பின்னர் பரிஸ் நகரசபை அமைதி காப்பதாகவும், இந்த விடயத்தில் செவிடாக இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு கட்சிகளும் மூன்று மாதங்களுக்கு முன்னரே இந்த கோரிக்கையை வைத்ததாகவும், "காசாவில் மக்கள் இறக்கும் வரை பாரிஸ் ஒளிர முடியாது, ஈபிள் கோபுரத்தை அணைப்போம்" எனவும் பசுமைக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.