உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்

17 புரட்டாசி 2025 புதன் 13:05 | பார்வைகள் : 236
ஒரு நாட்டின் ராணுவ பலத்தில், ICBM எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகள் அதன் மூலம் உலகின் எந்த பகுதியை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும்.
ஆனால், இத்தகைய ICBM ஏவுகணைகளை குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. இந்த ஏவுகணைகள் பாயும் தூரத்தை வைத்து அதன் திறன் மதிப்பிடப்படுகிறது.
ரஷ்யா வைத்துள்ள RS-28 Sarmat, 18,000 கிமீ தூரம் பாயும் 208 டன் ICBM ஆகும்.
இது FOBS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்புகளை கடந்து செல்கிறது. இதன் மூலம், உலகின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த முடியும்.
DF-41
சீனா வைத்துள்ள DF-41, 12,000–15,000 கிமீ தூரம் வரை பாயும், மேக் 25 வேகம் கொண்ட மொபைல் ICBM ஆகும். 10 MIRV களை சுமந்து செல்லும்.
இதனை, BeiDou வழிநடத்துகிறது. 2017 ஆம் ஆண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து PLA ராக்கெட் படையின் தடுப்பு சக்தியை அதிகரித்துள்ளது.
LGM-35 Sentinel
அமெரிக்காவின் LGM-35 Sentinel 13,000 கிமீ தூரம் வரை பாயும், W87 போர்முனைகளை சுமந்து செல்லும். இதன் மொத்த செலவு 140.9 பில்லியன் டொலராகும்.
இது 2075 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் நில அடிப்படையிலான அணுசக்தித் தடுப்பைப் பாதுகாக்கும்.
Trident II D5
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா பயன்படுத்தும் Trident II D5 12,000 கிமீ தூரம் செல்லும் தூரம், மேக் 24 வேகம், 8 MIRV-களைக் கொண்டுள்ளது.
90 மீட்டர் துல்லியம் கொண்ட இது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ICBM ஆகும். 190 முறைக்கு மேல் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
RS-24Yars
ரஷ்யா வைத்துள்ள RS-24 யார்ஸ், 10,500 கிமீ தூர திட எரிபொருள் ICBM ஆகும். 10 MIRV களை சுமந்து செல்லும் இது GLONASS வழிகாட்டுதலைப் பயன்படுத்துகிறது.
இது 250 மீட்டர் துல்லியம் கொண்ட இதனை சிலோஸ் அல்லது மொபைல் லாஞ்சர்களில் இருந்து நிலைநிறுத்தப்படுகிறது.