Paristamil Navigation Paristamil advert login

கட்டுப்பாட்டாளர் நித்திரை... விமான நிலையத்தில் சுற்றிச் சுழன்ற விமானம்!!

கட்டுப்பாட்டாளர் நித்திரை... விமான நிலையத்தில் சுற்றிச் சுழன்ற விமானம்!!

17 புரட்டாசி 2025 புதன் 11:50 | பார்வைகள் : 552


பரிசில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்று குறித்த நேரத்தை விட ஒருமணிநேரம் தாமதமாக தரையிறங்கியுள்ளது. 

செப்டம்பர் 15, நேற்று முன்தினம் திங்கட்கிழமை பரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் இருந்து பிரெஞ்சுத் தீவான Ajaccio  இற்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு விமான நிலையத்தில் இருந்து தரையிறங்குவதற்குரிய சமிக்ஞைகள் எதனையும் விமானம் பெறவில்லை. இதனால் விமானம் தரையிறங்குவததில் சிக்கல் எழுந்தது.

corse  தீவுக்கு உட்பட்ட வான்பரப்பில் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக விமானம் வட்டமிட்டது. அதன் பின்னரே விமானத்துக்கு விமான நிலையத்தில் இருந்து சமிக்ஞை கிடைத்தது.

விசாரணைகளில் குறித்த விமான நிலையத்தில் பணிபுரியும் கட்டுப்பாட்டாளர் தூங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது நீண்டகால அனுபவத்தில் இதுபோன்ற சம்பவம் ஏற்படுவது இதுவே முதன்முறையாகும்.

ஒரு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்திச் சென்ற இச்சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்