Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா-பெலாரஸ் இராணுவ பயிற்சியில் இந்தியா, ஈரான் பங்கேற்பு - NATO பதற்றம் அதிகரிப்பு

ரஷ்யா-பெலாரஸ் இராணுவ பயிற்சியில் இந்தியா, ஈரான் பங்கேற்பு - NATO பதற்றம் அதிகரிப்பு

17 புரட்டாசி 2025 புதன் 10:05 | பார்வைகள் : 259


ரஷ்யா-பெலாரஸ் இராணுவ பயிற்சியில் இந்தியா மற்றும் ஈரான் பங்கேற்றுள்ளது.

பெலாரஸின் போரிஸோவ் அருகே Zapad-2025 என்ற பெயரில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து நடத்தும் இராணுவ பயிற்சியில், இந்தியா மற்றும் ஈரான் உட்பட பல் அந்நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த பயிற்சி NATO-வுடன் ரஷ்யா எதிர்கொள்ளும் பதற்றமான சூழ்நிலையில் நடைபெறுவதால், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த கூட்டு பயிற்சியில் வங்காளதேசம், இந்தியா, ஈரான், பெலாரஸ், ஆப்பிரிக்க நாடுகளான ஃபாசோ, காங்கோ, மாலி ஆகிய நாடுகளின் படைப்பிரிவுகள் பங்கேற்றுள்ளன.

இந்தியாவிலிருந்து இந்த பயிற்சியில் பங்கேற்க 65 வீரர்கள், குறிப்பாக புகழ்பெற்ற குமாயோன் ரெஜிமண்ட் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வீரர்கள், நிஜ்னி நோவ்கொரோட் நகரத்திற்கு மேற்கே 40 மெயில் தொலைவில் உள்ள முலினோ பயிற்சி மைதியாத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

NATO எல்லையில் இருந்து தொலைவில் உள்ள இந்த இடம், பாதுகாப்பு கவலைகளை குறைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையையும் நட்பையும் அதிகரிப்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

இந்திய வீரர்கள் ரஷ்ய படையினருடன் இணைந்து tactical பயிற்சிகள், சிறப்பு ஆயுத பயிற்சிகள் மற்றும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்