ரஷ்யா மீது உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு

17 புரட்டாசி 2025 புதன் 06:42 | பார்வைகள் : 103
உக்ரைனில் இரவில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் ரஷ்யா இரவுநேர தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் சபோரிஜியா பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்தார்.
மேலும், தெற்கு மைக்கோலைவ் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் அங்குள்ள ஒரு பண்ணையைத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களில் மொத்தம் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் களத்தில் பணிபுரிந்த ஒரு டிராக்டர் சாரதி கொல்லப்பட்டதாக ஆளுநர் விட்டலி கிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது பொதுமக்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனின் விமானப்படை 'நாடு முழுவதும் ஒரே இரவில் 89 ரஷ்ய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக' தெரிவித்துள்ளது.