பரிசில் அதிர்ச்சி சம்பவம் – நடைபாதையில் சென்ற இளைஞர் மீது விளக்கு விழுந்து விபத்து!!

16 புரட்டாசி 2025 செவ்வாய் 20:25 | பார்வைகள் : 736
பரிஸ் 6வது வட்டாரத்தில் திங்கட்கிழமை (15/09/2025) நடந்த விசித்திரமான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பால்கனியில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த பழமையான விளக்கு திடீரென கீழே விழுந்தது. அந்த நேரத்தில் நடைபாதையில் சென்ற இளைஞரின் தலையில் அது மோதி காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் சிந்தியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக உதவி செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் லேசான காயமடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பராமரிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டினர். “பொது சொத்தாக இருந்தாலும், தனியார் சொத்தாக இருந்தாலும் பராமரிப்பு அவசியம்” என அப்பகுதி மேயர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.