Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine : தம்பதியினரை கட்டிவைத்து - கொள்ளையர்கள் கைவரிசை!!

Hauts-de-Seine : தம்பதியினரை கட்டிவைத்து - கொள்ளையர்கள் கைவரிசை!!

16 புரட்டாசி 2025 செவ்வாய் 18:19 | பார்வைகள் : 3261


Vaucresson, Hauts-de-Seine நகரில்  கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் செப்டம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய தம்பதியினர் இருவர் வசிக்கும் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அவர்கள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு வீட்டினை கொள்ளையிட்டுள்ளனர்.

தங்கக்கட்டிகள் மற்றும் தோல் பைகள் சிலவற்றை கொள்ளையிட்டுள்ளனர். அதன் மொத்த மதிப்பு 300,000 யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையர்கள் தப்பிச் சென்ற நிலையில், இரு முதியவர்களும்  காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் தொடர்பில் Nanterre  நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்