'கறுப்பு நாள்’ - செப்டம்பர் 18 நாடளாவிய முடக்கம்!!

16 புரட்டாசி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 739
பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வரும் 18 ஆம் திகதி (வியாழக்கிழமை) ‘கறுப்பு நாள்’ (« journée noire » ) எனும் தொனிப்பொருளில் நாடளாவிய முடக்கம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
RATP பொதுபோக்குவரத்து துறையின் 80% சதவீதமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தயாராகியுள்ளனர். ஏற்கனவே பாடசாலைகள், மருந்தக ஊழியர்கள், வாடகை மகிழுந்து சாரதிகள், எண்ணை ஆலைகளின் ஊழியர்கள் என பல தரப்பினர் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொது போக்குவரத்து துறையில் FO RATP தொழிற்சங்கமும் இணைந்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தை முற்றாக எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சென்ற 10 ஆம் திகதி இடம்பெற்றதுபோல் இம்முறையில் ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.