சீனாவின் சவாலை சமாளிக்க அணையை கட்ட துவங்கியது இந்தியா

16 புரட்டாசி 2025 செவ்வாய் 03:49 | பார்வைகள் : 189
திபெத்தின் யார்லுங் சாங்போ நதியில் சீனா மிகப்பெரிய அணை கட்டி வரும் நிலையில், அதை எதிர்கொள்ளவும், வெள்ளத்தை தடுக்கவும், அருணாச்சல பிரதேசத்தின் திபாங்கில், மிக உயரமான அணையை கட்ட முடிவு செய்த நம் நாடு, அதற்கான பணிகளையு ம் துவங்கி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. இதன் எல்லையில், அருணாச்சல பிரதேசம் அமைந்துள்ளது.
நீரோட்டம் திபெத்தில் உருவாகும் யார்லுங் சாங்போ நதி, பிரம்மபுத்திரா என்ற பெயரில் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக பாய்ந்து வங்கதேசத்தை அடைந்து இறுதியில் கடலில் கலக்கிறது.
யார்லுங் சாங்போ நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டும் பணியை சீனா கடந்த ஜூலையில் துவங்கியது. 15 லட்சம் கோடி ரூபாயில் கட்டப்படும் இந்த அணை, ஐந்தடுக்கு நீர்மின் நிலையங்களுடன் அமைகிறது.
இத்திட்டத்தால் பிரம்ம புத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் என்றும், அவசர காலங்களில் அதிகளவில் நீரை வெளியேற்றினால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் சீனாவிடம் மத்திய அரசு கவலை தெரிவித்தது.
மேலும், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பணிகளை மேற்கொள்ளும்படியும் மத்திய அரசு வலியுறுத்தியது. எனினும், இதை சீனா கண்டுகொள்ளவில்லை.
அருணாச்சல பிரதேசத்தின் திபாங் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, திபாங் பல்நோக்கு திட்டத்தின் கீழ், பிரம்மபுத்திராவின் முக்கிய துணை நதியான திபாங்கில், 2,880 மெகாவாட் திறனுடைய ஒரு பெரிய நீர்மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
வெள்ளப்பெருக்கு இந்த அணை கட்டும் பணியை, தேசிய நீர்மின் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திபாங் நதியின் குறுக்கே, 912 அடி உயரத்தில் மிகப்பெரிய அணை கட்டும் பணியை தேசிய நீர்மின் கழகம் துவங்கி உள்ளது.
இதன் வாயிலாக, ஆண்டுக்கு 11,223 மில்லியன் யூனிட் மின் சாரம் உற்பத்தி செய்யப் படும். அணை கட்ட, 17,069 கோடி ரூபா ய் மதிப்பில் டெண்டர் வி டப்ப ட்டுள்ளது.
திபெத்தில் சீனா அணை கட்டுவதை எதிர்கொள்ளவும், அந்நாடு திடீரென நீரை வெளியேற்றினால், நம் நாட்டில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்கவும், இந்த அணையை மத்திய அரசு கட்டுகிறது. வரும் 2032க்குள் அணையை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.