Fontenay-sous-Bois : கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி!!

15 புரட்டாசி 2025 திங்கள் 18:08 | பார்வைகள் : 355
Fontenay-sous-Bois (Val-de-Marne) நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவு 12.30 மணி அளவில் Allée du Buisson-de-la-Bergère பகுதி அருகே நின்றிருந்த ஒருவரை இரு இளைஞர்கள் இணைந்து தாக்கியுள்ளனர். கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட நபர் அதே பகுதியில் வசிப்பவர் எனவும், தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈவிரக்கம் இல்லாத படுகொலை என விசாரணைகளை ஆரம்பித்துள்ள SDPJ 94 பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதலுக்குரிய காரணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025