Paristamil Navigation Paristamil advert login

வளர்ச்சியை நோக்கி இந்தியா: ஆர்.எஸ்.எஸ்., பெருமிதம்

வளர்ச்சியை நோக்கி இந்தியா: ஆர்.எஸ்.எஸ்., பெருமிதம்

15 புரட்டாசி 2025 திங்கள் 06:25 | பார்வைகள் : 156


இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் எழுதிய 'பரிக்ரமா கிருபா சார்' என்ற புத்தக வெளியீட்டு விழா இந்துாரில் நடந்தது. நர்மதை நதி குறித்து பேசும் இந்த புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அனைவரது கணிப்புகளையும் பொய்யாகும் வகையில், நம் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. சிலரின் சுயநலம் தான் உலகில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்.

ஞானம், செயல் மற்றும் பக்தி அடங்கிய பாரம்பரிய தத்துவங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் தான், நம் நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரம் பெற்றதும், இந்தியா பல துண்டுகளாக சிதறி விடும் என பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கணித்திருந்தார்.

ஆனால், அவரது கணிப்புகள் எல்லாம் இன்று பொய்யாகிவிட்டன. சர்ச்சிலின் கணிப்பு தற்போது பிரிட்டனுக்கு தான் பொருத்தமாக இருப்பது போல் தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்