Juvisy-sur-Orge : சாரதி திடீர் மயக்கம்... உணவகத்துக்குள் பய்ந்த மகிழுந்து!!
15 புரட்டாசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 2440
சனிக்கிழமை நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக Juvisy (Essonne) நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துரித உணவகம் ஒன்றுக்குள் மகிழுந்து பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
பரிசுக்கு வெளியே மிக அதிகளவான பயணிகள் கூடும் Juvisy-sur-Orge தொடருந்து நிலையத்துக்கு அருகே உள்ள உணவகம் ஒன்றின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு, மகிழுந்து ஒன்று உள்ளே பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தில் வாடிக்கையாளர்கள் சிலர் காயமடைந்தனர். அவசர மருத்துவக் குழுவினர் அழைக்கப்பட்டனர்.
மகிழுந்தை செலுத்தியது 1930 ஆம் ஆண்டு பிறந்த 95 வயதுடைய முதியவர் ஒருவர் எனவும், மகிழுந்தை செலுத்திக்கொண்டிருக்கும்போது திடீரென அவர் சுகவீனமுற்று மயங்கி விழுந்ததை அடுத்தே மகிழுந்து கட்டுப்பாடில்லாமல் உணவகத்துக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவரின் மனைவியும் மகிழுந்தில் இருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, சென்ற 6 ஆம் திகதி இதேபோன்ற ஒரு விபத்து Pirou நகரில் இடம்பெற்றிருந்தது. அதில் இருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan