Paristamil Navigation Paristamil advert login

RN கட்சியினரை நம்பவேண்டாம் என பிரதமருக்கு முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ எச்சரிக்கை!!

RN கட்சியினரை நம்பவேண்டாம் என பிரதமருக்கு முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ எச்சரிக்கை!!

14 புரட்டாசி 2025 ஞாயிறு 22:19 | பார்வைகள் : 395


மரீன் - லு- பென்னின் RN கட்சியை நம்ப வேண்டாம் என புதிய பிரதமர் Sébastien Lecornu  இற்கு  முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ எச்சரித்துள்ளார். 

இம்மானுவல் மக்ரோனின் அரசியல் கொள்கைகளை பிரதமர் கைவிடாவிட்டால், அவரது அரசாங்கம் மீண்டும் வீழ்ச்சியடையும் என RN  கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் Jordan Bardella இன்று தெரிவித்தார். பிரெஞ்சு மக்களின் பணம் வீணடிக்கப்படுவதாகவும், அவர்களது பணம் எங்கு போகிறது என தெரியாமல் உள்ளதாகவும், அவர்களது வாழ்க்கை முறை முன்னேற்றப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரையும், அவரது கட்சியினரையோ நம்ப வேண்டாம் என முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ எச்சரித்துள்ளார். 

“பிரெஞ்சு மக்களுக்கு இனி மக்ரோனின் ஆட்சி மீது எந்த நம்பிக்கையும் இல்லை!” எனவும்  Jordan Bardella தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்