ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே கத்திக்குத்து தாக்குதல்!!
14 புரட்டாசி 2025 ஞாயிறு 21:19 | பார்வைகள் : 1677
ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே உள்ள Pont de l'Alma மேம்பாலத்தில் வைத்து கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று செப்டம்பர் 13, சனிக்கிழமை இரவு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. நபர் ஒருவர் மற்றொரு நபரை பல தடவைகள் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குறித்த நபர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.
விசாரணைகளை ஏழாம் வட்டார காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan