மீண்டும் அனைத்தையும் முடக்குவோம்! - தொழிற்சங்கத்தினர் களத்தில்....!!
13 புரட்டாசி 2025 சனி 19:25 | பார்வைகள் : 2922
செப்டம்பர் 10 ஆம் திகதி போன்று மீண்டும் பிரான்சை முடக்குவோம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 18 ஆம் திகதி புதிய வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகிவருகின்றனர். "Bloquons tout" எனும் தொனிப்பொருளில் அனைத்து சேவைகளையும் முடக்க ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். மிகக்குறிப்பாக வங்கிப்பரிவர்த்தனைகளை குறித்த நாளில் மேற்கொள்ள வேண்டாம் எனவும், முடிந்தவரை பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்து, வங்கிகளை முடக்குவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதேபோன்ற ஒரு வங்கி முடக்கத்துக்கு கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி முயற்சி செய்திருந்தனர். ஆனால் எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் அன்றைய நாளில் நாங்கள் அவதானிக்கவில்லை என Banque de France தெரிவித்துள்ளது.

























Bons Plans
Annuaire
Scan