Paristamil Navigation Paristamil advert login

இடி மின்னல் மழை - இல்-து-பிரான்ஸ் உட்பட 47 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இடி மின்னல் மழை - இல்-து-பிரான்ஸ் உட்பட 47 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

13 புரட்டாசி 2025 சனி 13:20 | பார்வைகள் : 295


இடி மின்னல் தாக்குதலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு 47 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் அடங்குகின்றன.

செப்டம்பர் 13, இன்று சனிக்கிழமை நண்பகல் முதல் நள்ளிரவு வரை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் (Météo-France)  எச்சரித்துள்ளது. வடமேற்கில் ஆரம்பித்து வடகிழக்கு வரையும், தென் கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ள மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Aisne, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Ardennes, Aube, Bouches-du-Rhône, Calvados, Côte-d'Or, Côtes d'Armor, Drôme, Eure, Eure-et-Loir, Finistère, Gard, Ille-et-Vilaine, Loir-et-Cher, Loiret, Lozère, Manche, Marne மற்றும் Haute-Marne மாவட்டங்களுக்கும்,

Mayenne, Meurthe-et-Moselle, Meuse, Morbihan, Moselle, Nord, Oise, Orne, Pas-de-Calais, Pyrénées-Orientales, Haute-Saône, Sarthe, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Somme, Vaucluse, Vosges, Yonne, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-D'Oise மாவட்டங்களுக்கும் “மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை Var  மாவட்டத்துக்கு இடி மின்னல் மழையுடன் கூடிய வெள்ள அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு அதற்கு 
செம்மஞ்சள்  நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்