2016 ஆம் ஆண்டின் பின்னர் - பொது போக்குவரத்துக்களில் திருட்டுச் சம்பவங்கள் வீழ்ச்சி!

13 புரட்டாசி 2025 சனி 12:20 | பார்வைகள் : 398
2016 ஆம் ஆண்டின் பின்னர் இல்-து-பிரான்சுக்குள் பொது போக்குவரத்துக்களில் இடம்பெறும் திருட்டுக்கள், கொள்ளைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் 107,080 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை சென்ற 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன. அதேவேளை, 2016 ஆம் ஆண்டின் நிலமையோடு ஒப்பிடுகையில் மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இதில் கொவிட் 19 பரவல் வருடங்களும் உள்ளடங்குகின்றன.
2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஒரு மில்லியன் பயணங்களுக்கும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது.
உள்நாட்டு பாதுகாப்பு புள்ளிவிவர சேவைகள் அமைச்ச்சகம் (Services statistique ministériel de la sécurité intérieure - SSMSI) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025