Paristamil Navigation Paristamil advert login

காவல்துறை வீரரை தாக்கிய சிறுவர்கள்! - விசாரணைகள் ஆரம்பம்!!

காவல்துறை வீரரை தாக்கிய சிறுவர்கள்! - விசாரணைகள் ஆரம்பம்!!

13 புரட்டாசி 2025 சனி 11:20 | பார்வைகள் : 365


காவல்துறை வீரர் ஒருவரை இரு நபர்கள் இணைந்து தாக்கியுள்ளனர். குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

Tourcoing (Nord) நகரில் இச்சம்பவம் வியாழக்கிழமை மாலை 8 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த Brigade anti-criminalité (BAC)  காவல்துறை வீரர் ஒருவர் இரு சிறுவர்களால் தாக்கப்பட்டார். அவரை கீழே தள்ளி வீழ்த்தி அவரை சரமாரியாக தாக்கினர்.

குறித்த சம்பவம் பாதசாரி ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது. அதேவேளை விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் 16 வயதுடைய சிறுவன் எனவும், இரண்டாவது சிறுவன் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சர்  Bruno Retailleau இத்தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்