இந்தியாவின் நடுத்தர வர்க்கம் நமக்கான பெரும் வாய்ப்பு

13 புரட்டாசி 2025 சனி 07:07 | பார்வைகள் : 154
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க துாதராக அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்துள்ள செர்ஜியோ கோர், 'இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் உள்ள நடுத்தர வர்க்கம், அமெரிக்க சந்தைக்கான மிகப்பெரும் வாய்ப்பு' என கூறினார்.
இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டி இருந்தார். இவர், முன்னாள் அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டவர். இந்தாண்டு ஜனவரி 20ல் டிரம்ப் அதிபரானதும், இவர் பதவி விலகினார்.
உறவில் விரிசல்
இதையடுத்து, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் பதவி காலியாக இருந்தது. தற்போது இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால், இரு நாட்டு உறவில் விரிசல் உருவாகியுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக செர்ஜியோ கோர் என்பவரை அதிபர் டிரம்ப் தேர்வு செய்தார். இவர், டிரம்பின் முன்னாள் ஆலோசகர் மற்றும் அவரது பிரசாரத்துக்கு நிதி திரட்டியவர்.
அமெரிக்க அரசியலமைப்புபடி அதிபரால் துாதராக தேர்வு செய்யப்படுவோர், அந்நாட்டு பார்லிமென்டின் வெளியுறவு குழு முன் ஆஜராகி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இந்நிலையில் நேற்று கூடிய வெளியுறவு குழு கூட்டத்தில், அத்துறையின் அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான துாதர் செர்ஜியோ கோரை அறிமுகப் படுத்தினார்.
அவர், குழு முன் பேசியதாவது:
நம் அதிபருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே ஆழமான நட்பு உள்ளது. இது தனித்துவமானது. அதிபர் டிரம்ப் வரி விவகாரத்தில் வேறு நாடுகளை தாக்கும்போது, அவற்றின் தலைவர்களையும் தாக்கி பேசினார். ஆனால், இந்தியாவை விமர்சித்த அதே வேளையில் மோடியுடனான தனிப்பட்ட நட்பு குறித்து பாராட்டினார்.
வாய்ப்பு
இந்தியா - அமெரிக்கா இடையே தற்போது நடக்கும் வர்த்தக பேச்சுகள் மூலம் நம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக்களை இந்தியா வாங்கும் என நம்புகிறோம்.
இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. அதில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் அளவே, அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். நம் சந்தையை அங்கு விரிவுபடுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மையப்புள்ளி இந்தியா
இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக தேர்வு செய்யப்பட்டுள்ள செர்ஜியோ கோரை அறிமுகப்படுத்தி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசுகையில், ''இந்த 21ம் நுாற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இந்தியா - பசிபிக் பெருங்கடல் பகுதி நாடுகள் உள்ளன. அதில் மையப்புள்ளியாக இந்தியா உள்ளது. நமக்கும், இந்தியாவுக்கும் சில முக்கியமான பிரச்னைகள் உள்ளன. அவற்றை பேசி தீர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த பணிக்கு இந்திய துாதராக தேர்வு செய் யப்பட்டுள்ள செர்ஜியோ கோர் சிறந்தவர்,'' என்றார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025