முன்னாள் அதிபர் சார்கோசியை சந்தித்த நாட்டின் புதிய பிரதமர்!!
12 புரட்டாசி 2025 வெள்ளி 13:20 | பார்வைகள் : 5929
நாட்டின் புதிய பிரதமர் Sébastien Lecornu, பொறுப்பேற்றுக்கொண்ட அடுத்த நாளே முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசியை சந்தித்தார். பரிசில் உள்ள சார்கோசியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை (11/09/2025) நடைபெற்ற இச்சந்திப்பில், சார்கோசி தனது நட்பு மற்றும் ஆதரவைக் குறிப்பிட்டதுடன், பிரதமராக நியமிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை பிரதமராக நியமிக்கப்பட்ட தினத்திலேயே, இருவரும் தொலைபேசி வழியாக உரையாடியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக இச்சந்திப்பு நடை பெற்றதாக AFP செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
லெகோர்னூ தனது அரசியல் வாழ்க்கையை யூ.எம்.பி. கட்சியில் தொடங்கி, பின்னர் இம்மானுவேல் மக்ரோன் அணியில் இணைந்தவர். மக்ரோன் அணியில் சேர்ந்த வலதுசாரி தலைவர்களில் முக்கியஸ்தரான அவர், பிரதமராக நியமிக்கப்பட்ட உடனே கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், தேசிய சபை மற்றும் செனட் தலைவர்களையும் சந்தித்தார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan