குடியேற்ற ஒதுக்கீட்டுச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்! - மக்கள் கருத்து!!
12 புரட்டாசி 2025 வெள்ளி 12:18 | பார்வைகள் : 5179
பிரான்சில் குடியேற்றச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என பெரும்பான்மையாக மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகளே பிரான்சில் பிரதானமாக உள்ள நிலையில், இது தொடர்பாக விதம் விதமான கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், CSA நிறுவனம் CNEWS, Europe 1 மற்றும் Journal du Dimanche போன்ற ஊடகங்களுக்கான மேற்கொண்டிருந்த புதிய கருத்துக்கணிப்பில் ”பிரான்சில் குடியேற்றத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரவேண்டுமா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு 75% சதவீதமானவர்கள் ஆம் என கருத்து தெரிவித்துள்ளனர். 24% சதவீதமானவர்கள் இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். மற்றைய 1% சதவீதமானோர் கருத்துக்கள் எதையும் தெரிவிக்க விரும்பவில்லை.
கருத்துக்கணிப்பு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இணையவழியாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. 18 வயது நிரம்பிய 1,003 பேர் இதில் பங்கேற்றிருந்ததனர்.


























Bons Plans
Annuaire
Scan