Paristamil Navigation Paristamil advert login

AirPods Pro 3 - பிரான்சில் சிக்கல்!!

AirPods Pro 3 - பிரான்சில் சிக்கல்!!

12 புரட்டாசி 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 869


ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை AirPods Pro கருவி ”மொழிபெயர்ப்பாளர்களாக” செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியினையும் மொழிபெயர்க்கும் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருவி ஊடாக தொலைபேசி உரையாடலில் ஈடுபடும்போது அதில் பிரெஞ்சு மொழியில் உரையாடுவதை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளிலோ, அல்லது வேறு மொழிகளில் உரையாடும் போது அதனை பிரெஞ்சிலோ உடனடியாக மொழிமாற்றும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. இதனை « Traduction en direct » என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளார்.

இரண்டாம் தலைமுறை AirPods Pro  வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதன் மூன்றாம் தலைமுறை 249 யூரோக்களுக்கு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஆனால் இந்த வசதி பிரான்சிலும் ஐரோப்பாவில் கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது. குறைந்தது இந்த வருடத்தில் கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செயற்படும் இந்த மொழிபெயர்ப்பு ஐரோப்பிய விதிமுறைகளுக்குள் ( réglementations européennes sur la protection des données - GDPR) பொருந்தாது என்பதால் ஐரோப்பியர்கள் இதனை பெற்றுக்கொள்ள காலமெடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்