Paristamil Navigation Paristamil advert login

போலந்தை பாதுகாக்க புறப்படுகிறது பிரெஞ்சு ரஃபேல்!!

போலந்தை பாதுகாக்க புறப்படுகிறது பிரெஞ்சு ரஃபேல்!!

11 புரட்டாசி 2025 வியாழன் 22:44 | பார்வைகள் : 570


போலந்து நாட்டின் வான்பரப்புக்குள் ரஷ்யாவின் ட்ரோன்கள் சில சுட்டுவீழ்த்தப்பட்டதை அடுத்து, பிரெஞ்சு ரஃபேல் விமானங்கள் பாதுகாப்புக்காக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

செப்டம்பர் 11, இன்று மாலை ஜனாதிபதி மக்ரோன் இதனை அறிவித்தார். NATO அமைப்பில் உள்ள கிழக்கு ஐரோப்பாவை பாதுகாக்கவேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மக்ரோன், போலந்தின் வான்பரப்பை பாதுகாக்க மூன்று ரஃபேல் விமானங்களை உடனடியாக அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

போலந்து பிரதமர் டோனல் டஸ்க்குடன் தொலைபேசி வழியாக உரையாடிய மக்ரோன், அதன் பின்னரே இதனை அறிவித்தார்.

யுக்ரேன் மீது 450 ட்ரோன்களை ரஷ்யா அனுப்பிய நிலையில், அவற்றின் 19 ட்ரோன்கள் போலந்தின் எல்லைக்குள் நுழைந்துள்ளது. அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் Dutch F-35 ரக ஆபத்தான ட்ரோன்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்