Paristamil Navigation Paristamil advert login

பரிசில் உணவகம் தீ வைப்பு! - காவல்துறையினரே காரணம்!!

பரிசில் உணவகம் தீ வைப்பு! - காவல்துறையினரே காரணம்!!

11 புரட்டாசி 2025 வியாழன் 14:40 | பார்வைகள் : 872


பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் உள்ள கொரிய உணவகம் ஒன்று நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தீக்கிரையாகியிருந்தது. இந்த தீ பரவலுக்கு காவல்துறையினரே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Les Halles பகுதியின் Rue Saint-Denis வீதியில் உள்ள குறித்த உணவகம் நேற்று பிற்பகல் 4 மணி அளவில் தீக்குள் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்தது. அது தொடர்பான விசாரணைகளில் குறித்த தீ பரவல் காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகைகொண்ட கிரைனைட் குண்டின் மூலம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வீசிய கிரைனைட், பெரும் சேதத்தை ஏற்படுத்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்