Paristamil Navigation Paristamil advert login

உணவகம் தீக்கிரை! - RER சேவைகள் பாதிப்பு! - பலத்த வன்முறை!!

உணவகம் தீக்கிரை! - RER சேவைகள் பாதிப்பு! - பலத்த வன்முறை!!

10 புரட்டாசி 2025 புதன் 16:32 | பார்வைகள் : 1699


ஒக்டோபர் 10, இன்று புதன்கிழமை நாட்டின் பல்வேறு நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்களோடு வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.
****

பரிஸ் மத்தியில் உள்ள உணவகம் ஒன்று தீ வைக்கப்பட்டுள்ளது.  Les Halles இல் உள்ள உணவகம் ஒன்றுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

Forum des Halles வணிக வளாகத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டு, வளாகம் மூடப்பட்டது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியதால் வன்முறைகளை தவிர்க்கும் முகமாக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாடு முழுவதும் 190 இடங்களில் 229 ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜொந்தாமினர் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்கமும் இணைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் 80,000 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Châtelet-les-Halles நிலையமூடாக இயக்கப்படும் அனைத்து RER சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rennes நகரில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் பலத்த வன்முறையாக மாறியுள்ளது. 10,000 பேர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு ஜொந்தாம் அதிகாரி காயமடைந்துள்ளார்.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி பரிசில் 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பரிசில் மொத்தமாக ஒன்பது பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்