ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த புதிய பிரதமர்!!
10 புரட்டாசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 3500
நாட்டின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள Sébastien Lecornu, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Sébastien Lecornu இனை பிரதமராக மக்ரோன் நேற்று பிற்பகல் நியமித்தார். அவருக்கான பதவியேற்பு விழா இன்று புதன்கிழமை இடம்பெற உள்ளது. “ஜனாதிபதிக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். என்மீது நம்பிகை வைத்த அவருக்கு எனது நன்றிகள்!”
என Sébastien Lecornu தெரிவித்தார்.
அத்தோடு, முன்னாள் பிரதமர் பிரான்சுவா பெய்ரூவுக்கும் அவரது நன்றிகளை பகிர்ந்துள்ளார். அவரது நம்பிக்கையை அவர் இறுதிவரை காப்பாற்றினார். அவரது துணிச்சலுக்காக வாழ்த்துக்கள் எனவும் பெய்ரூ குறித்து தெரிவித்தார்.
நாளை வியாழக்கிழமை பெய்ரூவுக்கான பிரியாவிடை விருந்துபசாரம் பிரதமர மாளிகையில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan