பதவி விலகல் கடிதத்தை கையளித்த பிரான்சுவா பெய்ரூ!!
9 புரட்டாசி 2025 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 2873
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ சற்று முன்னர் அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மக்ரோனிடம் கையளித்துள்ளார்.
பிரான்சுவா பெய்ரூ மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 194 வாக்குகளும், எதிராக 364 வாக்குகளும் பதிவான நிலையில், அவர் பதவி கட்டாயமாக பதவி விலகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மக்ரோனிடம் கையளித்தார்.
இந்நிலையில், பெய்ரூவுக்கான பிரியாவிடை விருந்து நாளை மறுநாள் வியாழக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற உள்ளதாகவும், பல முக்கிய அமைச்சர்கள் அதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பதவி விலகல் கடிதத்தை மக்ரோனிடம் வழங்கிவிட்டு, மூன்று மணி அளவில் எலிசே மாளிகையில் இருந்து பெய்ரூ புறப்பட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan