தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய துணிச்சலான இளைஞர்கள்!!
8 புரட்டாசி 2025 திங்கள் 19:45 | பார்வைகள் : 4704
ஓய்ஸ் மாநிலம் Beauvais நகரில், செப்டம்பர் 7ஆம் தேதி, ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பிடித்ததில் ஒரு பெண் தனது பால்கனியில் சிக்கி இருந்தார். அந்த கட்டிடத்தில் இருந்த புகையைப் பார்த்த இளைஞர்கள் சிலர், தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே துணிச்சலுடன் கட்டிடத்த்தில் ஏறி, அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
இவர்களில் ஒருவரான அலிசன் ஹொப்பேவின் மருமகன், முன்னாள் இளைஞர் தீயணைப்பாளர் என்பதால், அவரது பயிற்சி இந்த நிலைமையில் உதவியது. இந்த நற்செயல் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டது. பலரும் இளைஞர்களின் தைரியத்தையும், கருணையையும் புகழ்ந்தனர்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் புகைநச்சுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்பாளர்கள் 25 பேர் சம்பவ இடத்திற்கு வந்து, தீ பரவுவதை தடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan