Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் 805 ட்ரோன்கள், 13 ஏவுகணைகள் அச்சுறுத்தலுக்கு எதிராக மக்ரோனின் கண்டனம்!!

உக்ரைனில் 805 ட்ரோன்கள், 13 ஏவுகணைகள்  அச்சுறுத்தலுக்கு எதிராக  மக்ரோனின் கண்டனம்!!

7 புரட்டாசி 2025 ஞாயிறு 20:14 | பார்வைகள் : 3341


உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரஷ்யாவின் மிகப்பெரிய வான்வழி தாக்குதலின் போது, கீவில் உள்ள அரசு மையம் தீக்கிரையாகியது. 

உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, ரஷ்யா 805 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஒரு இரவில் ஏவியது. இது 2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய போரில் இருந்து மிக மோசமான தாக்குதல் எனக் கருதப்படுகிறது.

இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கியுடன் நீண்ட நேரம் பேசினார். மக்ரோன், ரஷ்யா "போர் மற்றும் பயங்கரவாதத்தின்" பாதையில் மேலும் மூழ்கிக்கொண்டிருப்பதாகக் கூறினார். அவர், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அரசு மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து, "நியாயமான மற்றும் நீடித்த அமைதி"க்காக பிரான்ஸ் தொடர்ந்து முயற்சி செய்யும் என உறுதி தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்