Tremblay-en-France பகுதியில் 15 வயது சிறுமி தற்கொலை!!

7 புரட்டாசி 2025 ஞாயிறு 19:14 | பார்வைகள் : 3122
ட்ரெம்ப்ளே-அன்-பிரான்ஸ் (Seine-Saint-Denis) பகுதியில் துயரச் சம்பவம் இடம்பெற்றது. இன்று அதிகாலை 3 மணியளவில்(07/09/2025), 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த குடியிருப்பு வீட்டின் 11-ஆம் மாடி ஜன்னல் வழியாக குதித்து உயிரிழந்தார். உடனடியாக மீட்புப் படையினர் வந்து உதவியிருந்தாலும், சிறுமியை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் குறித்து Bobigny நீதிமன்றம் விசாரணை தொடங்கியுள்ளது.
காவல்துறை "தற்கொலை எனும் கோணத்தில்" விசாரித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "சிறுமி குடும்பம் அனைவராலும் மதிக்கப்படும் நல்லவர்கள்". என அண்டை வீட்டினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் மக்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.