Paristamil Navigation Paristamil advert login

Seine-Saint-Denis : இளைஞனை தாக்கிய காவல்துறை வீரர்! - காணொளி வெளியாகி, பரபரப்பு!!

Seine-Saint-Denis : இளைஞனை தாக்கிய காவல்துறை வீரர்! - காணொளி வெளியாகி,  பரபரப்பு!!

6 புரட்டாசி 2025 சனி 15:41 | பார்வைகள் : 611


 

இளைஞன் ஒருவர் காவல்துறை வீரரால் தாக்கப்படும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரை கண்காணிக்கும் IGPN அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற திகதி குறித்து சரியான தகவல்கள் இல்லை என்றபோதும் Seine-Saint-Denis நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், காவல்துறை வீரர் ஒருவர் இளைஞன் ஒருவனை தாக்கி, அவரது தொலைபேசியை தூக்கி வீசி, எச்சிலும் துப்பியுள்ளார்.

குறித்த சம்பவத்தை பெண் ஒருவர் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதை அடுத்து, IGPN அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்