Paristamil Navigation Paristamil advert login

700 நாட்களைக் கடக்கிறது..!' - பணயக்கைதிகளை விடுவிக்க மக்ரோன் அறிவுறுத்தல்!!

700 நாட்களைக் கடக்கிறது..!' - பணயக்கைதிகளை விடுவிக்க மக்ரோன் அறிவுறுத்தல்!!

5 புரட்டாசி 2025 வெள்ளி 20:02 | பார்வைகள் : 2482


 

700 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

ஹாமாஸ் பணயக்கைகளை பிடித்து இன்றுடன் 700 நாட்கள் ஆவதாக சுட்டிக்காட்டிய மக்ரோன், "காட்டுமிராண்டித்தனமும் துன்பமும் மிக நீண்ட காலமாக நடந்து வருகின்றன, " என கண்டித்ததோடு, காஸாவில் ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அனைது பணயக்கைதிகளையும் உடனே விடுவிக்குமாறும் வலியுறுத்தினார்.

பணயக்கைகளை கடத்தியது தொடர்பில் ஹமாஸ் அமைப்பினர் மூன்றரை மணிநேர காணொளி ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.  பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் திட்டத்தையும் மக்ரோன் அறிவித்துள்ளார். இந்த பரபரப்புகளுக்கு இடையே பணயக்கையிகளை உடனடியாக விடுவிக்க மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்